"அடடா இது ஒரு அதிசயமே"... சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் கவிதை வாசித்த மாணவன்
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையிலிருந்து கோவைக்குச் சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணித்த மாணவன், அடடா இது ஒரு அதிசயமே என்று உற்சாகமாக கவிதை வாசித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் 350 பேர் பெரம்பூர் வரையில் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர் ஒருவர் "அரிய ஒரு வாகனம் அடடா இது ஒரு அதிசயமே" என வந்தேபாரத் குறித்த கவிதை வாசித்தார்.
பாதுகாப்பான பயணத்தை வந்தே பாரத் ரயில் வழங்குவதாக ரயிலை இயக்கிய லோக்கோ பைலட் கூறினார். ரயிலில் பயணித்த ஐஐடி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
ரயிலில், பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி பயணித்த நிலையில், வந்தே பாரத் ரயில் இயக்கம் கோவை மக்களுக்கு நல்ல செய்தி என வானதிசீனிவாசன் கூறினார்.
Comments